2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

போகாவத்தை ஆற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு

Editorial   / 2017 நவம்பர் 12 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

கொய்யாப்பழம் பறிக்கச் சென்ற 6 வயதுச் சிறுவன், சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, திம்புள்ள, பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

போகாவத்தை தோட்டத்தைச் சேர்ந்த தரம் 1 இல் கல்வி பயிலும்  6 வயதுடைய ராஜேந்திரகுமார் அஷ்வின் என்ற சிறுவனே, போகாவத்தை ஓயாவில் இன்று (12)  காலை சடலமாக மீட்டுள்ளார்.

நேற்று (11) மாலை 5 மணிமுதல் வீட்டிலிருந்த சிறுவன் காணாமல் போன நிலையில், உறவினர்களும் தோட்ட மக்களும் தேடுதலில் ஈடுட்டனர்.

தேடுதலின் போது,  சிறுவனின் வீட்டின் அருகிலுள்ள போகாவத்தை ஓயாவில்  சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

சடலத்தைக் கண்ட பிரதேசவாசிகளும் உறவினர்களும், திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, சடலத்தை மீட்ட பொலிஸார், கொய்யாப்பழம் பறிக்கச் சென்ற போதே, சிறுவன் தவறி ஆற்றில் வீழ்ந்திருக்கலாமெனச் சந்தேகம் வெளியிட்டனர்.

ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி, சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணையைத் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .