Kogilavani / 2017 ஏப்ரல் 26 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக, கூட்டணியின் செயலகம் ஹட்டனில் அமைக்கப்படவுள்ளதாக, ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் முன்னாள் தலைவர் அழகன் நந்தகுமார் தெரிவித்தார்.
“இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்பதாக, ஹட்டனில் விசேட செயலகம் திறக்கப்படவுள்ளது. இச்செயலகத்துக்குப் பொறுப்பாக நானும் மாகாண சபை உறுப்பினர் எம்.ராமுவும் நியமிக்கப்பட்டுள்ளோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,
இந்திய பிரதமரின் ஹட்டன் விஜயம், உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய பிரதமரை வரவேற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஹட்டன் நகரத்தில் விசேட செயலகம் ஒன்றை இம்மாத இறுதிக்குள் திறக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
30 வருடங்களுக்குப் பின்னர் இந்திய பிரதமரொருவர் மலையகத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இவரின் வருகை சிறப்புப்பெற வேண்டும். இதன்காரணமாக, தமிழ் முற்போக்குக் கூட்டணி பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இதேவேளை, விசேட பஸ் போக்குவரத்துகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று அவர் மேலும் கூறினார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago