2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

மாணவி விவகாரம்: இருவர் கைது

George   / 2016 செப்டெம்பர் 05 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பொகவந்தலாவை இராணிகாடு தோட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவியை கடத்தியதாக கூறப்படும் கண்டியைச் சேர்ந்த இளைஞனின் தாய் மற்றும் முச்சக்கரவண்டி சாரதி ஆகியோரை கைதுசெய்ததாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

'குறித்த மாணவியையும் அவரை முச்சக்கர வண்டியில் அழைத்து சென்ற மாமாவையும் காணவில்லை' என்று சிறுமியின் பெற்றோர், பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை  (01) முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த மாணவி, சம்பவ தினத்தன்று காலை 07.45 மணியளவில் முச்சக்கர வண்டியில் ஏறிச் சென்றதை சக மாணவியொருவர் கண்டுள்ளார்.

முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்,  இளைஞனின் தாயையும் மற்றும் சாரதியையும் கைதுசெய்துள்ளனர்.

எனினும், இளைஞன்  மற்றும் மாணவியை பொலிஸார் தேடி வருவதுடன், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாணவி, பொகவந்தலாவையில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 9இல் கல்விக் கற்பதுடன் அவரது மாமா என்றுக் கூறப்படும் நபர் கண்டி கலகாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .