Kogilavani / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
குடும்பச் சண்டையில் தனது மாமானாரின் வலது கையைக் கத்தியால் வெட்டித் துண்டாக்கியதாக கூறப்படும், அவருடைய மருமகனான 23 வயது இளைஞனை, எத்திமலை
பொலிஸார் செவ்வாய்க்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.
மொனராகலை, கொட்டியாகலை கிராமத்தைச் சேர்ந்த 60 வயது நபர், தனது வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில், மொனராகலை வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை( 6) அனுமதிக்கப்பட்டார்.
தனது மகளுக்கும் மருமகனுக்குமிடையில் இடம்பெற்ற குடும்பச்சண்டையின் போது ஆத்திரத்தில் மருமகன் வீசிய கத்தி மாமானாரின் கையை பதம்பார்த்தது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர், மொனராகலை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது கையை மீண்டும் இணைப்பதற்கு வைத்தியர்கள் முயற்சித்துள்ளனர்.
ஹெரோயினுடன் இருவர் கைது
மு.இராமச்சந்திரன்
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில், வெல்லம்பிட்டியைச் சேர்ந்த இருவரை கினிகத்தேன பொலிஸார், செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்துள்ளடன் இவர்களிடமிருந்து 9 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளனர்.
கினிகத்தேனை நகரில் வைத்தே மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விபத்தில் வயோதிபர் பலி
மொஹொமட் ஆஸிக்
கேகாலை ஹபுகஸ்தென்னவிலிருந்து, ஹெலமட பிரதேசத்துக்கு பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலுள்ள ஆற்றினுள் விழுந்து விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 77 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இவ்விபத்தில், இம்புல்கஸ்தெனிய வட்டாரம பிரதேசத்தைச் சேர்ந்த அருணாரத்ன் அபேசேக்கர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பொலிஸ் அதிகாரி காயம்
மொஹொமட் ஆஸிக்
கண்டி குருநாகல் வீதி, பரிகம-அலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மத்திய மாகாண பிரதிபொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மின்சார தாக்குதலில் இளைஞன் பலி
எம்.செல்வராஜா
மரக் கிளைகளை வெட்டச் சென்ற 29 வயது இளைஞன், மின்சார தாக்குதலுக்குள்ளாகி பரிதாபகரமாக உயிரிழந்தச் சம்பவம், பதுளை மீகாகியுல பிரதேசத்தில், செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில், மேற்படி பகுதியைச் சேர்ந்த டி.எம்.சமில என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் தீ
எம்.செல்வராஜ
வெலிமடை வைத்தியசாலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ காரணமாக, ஒரு பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
வெலிமடைப் பொலிஸாரும், வைத்தியசாலை ஊழியர்களும் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .