2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

மீராமக்கம் பள்ளிவாசல் மீது தாக்குதல்: சந்தேக நபர்களை கைதுசெய்யுமாறு கோரிக்கை

Kogilavani   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, மீராமக்கம் பள்ளிவாசல் மீது கல்லெறிந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை நடத்தி சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துமாறு தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்,  மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'கண்டி, மீராமக்கம் பள்ளிவாசல் மீது சனிக்கிழமை (26)  இரவு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசல் மீது  சில மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறான தாக்குல் நடத்தப்பட்டதுடன் இத்தாக்குதலில் பள்ளிவாசலின் கூரைகள் சேதமடைந்தன. இத்தாக்குதலுக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.   

எனவே, இச்சம்பவங்கள்; தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்தி, குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துங்கள். கடந்த காலங்களில் இடம்பெற்ற இவ்வாறான நாசகார செயல்கள், நல்லாட்சியிலும் தொடர இடமளிக்க வேண்டாம்' என்று ஹலீம் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .