2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

மாவளை தோட்ட மேற்பிரிவு மாணவர்களின் கல்வியை உயர்த்த நடவடிக்கை

Kogilavani   / 2016 ஜனவரி 14 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ

இரத்தினபுரி நகர எல்லையில் அமைந்துள்ள மாவளை தோட்டத்தின் மேற் பிரிவில் வாழும் மாணவர்களின்; கல்வியை உயர்த்துவதற்கு சப்ரகமுவ மாகாண சபை விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

பலாங்கொடை கம்பனிக்கு சொந்தமான மாவளை தோட்டத்தின் மேற்பிரிவில் 101 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இத்தோட்டத்தில் 105 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்கள் பாடசாலைக்கு செல்வதாயின் 4 கிலோமீற்றர் தூரத்திலுள்ள இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயம் மற்றும்
அல் மக்கியா முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றுக்கே செல்ல வேண்டியுள்ளது.

போக்குவரத்து சிரமம் காரணமாக 45 மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதை இடை நிறுத்தியுள்ளனர். சிலர்;; மாதத்தில் சில தினங்கள் மட்டுமே பாடசாலைக்கு செல்வதாக  பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களின் நலன் கருதி தோட்ட வீதிகள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்தள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்தோட்டத்தில் பாடசாலைக்கு செல்லாமல் உள்ள மாணவர்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .