Kogilavani / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மலேசியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் மற்றும் இரண்டாம் நிலை செயலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்;ப்புத் தெரிவித்து, மத்திய மாகாண சபையின் ஆளும்தரப்பு உறுப்பினர்கள், நேற்று புதன்கிழமை நடைபெற்ற மாகாண சபை அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.
மத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வு, சபைத் தலைவர் எல்.டி.நிமலசிறி தலைமையில், கண்டி பல்லேகலையிலுள்ள மாகாண சபை கட்டடத்தில், நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
இதன்போது, மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் குணத்திலக ராஜபகஷ மேற்படி தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பை தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து நிமல் பியதிஸ்ஸவும் தமது எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், இதனை தனிப்பட்ட தாக்குதலாக கருதமுடியாது எனவும் முழு இலங்கையர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே கருத வேண்டும் எனவும் கூறினார்.
இதற்காக சபை அமர்வை 5 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்குமாறு சபைத் தலைவரை கோரினார்.
சபைத் தலைவர் இதiனை ஏற்றுக்கொள்ளா மறுத்ததையடுத்து, 20ற்கும் மேற்பட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சபையை விட்டு வெளிநடப்புச் செய்தனர்.
இதனையடுத்து சபையில் போதிய கோரமின்மைக் காரணமாக, 15 நிமிடங்களுக்கு சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும ;11.45 அளவில் கூடியது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago