Kogilavani / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
'மலேசியாவில் வைத்து, எமது நாட்டின் தூதுவரும் இரண்டாம் நிலை செயலாளரும் தாக்கப்பட்டமையானது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறான தாக்குதலின் பிரதிபலனை, இலங்கையில் இருக்கின்ற தமிழர்களே சந்திக்க நேரிடும். நன்மை செய்வதாக நினைத்துச் செய்யும் செயற்பாடுகள், தீமையையே ஏற்படுத்துகின்றது' என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலேசியாவிலுள்ள இலங்கைத்
தூதுவர் மற்றும் இரண்டாம் நிலை செயலாளர் மீது, ஞாயிற்றுக்கிழமை (4) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது,
'இன்று இலங்கையில் சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து இனத்தவரும் சமமாக மதிக்கப்படுகின்றனர். இந்த சுமூக நிலைமையை, வெளிநாட்டவர்கள் குழப்பாமல் இருக்க வேண்டும். வெளிநாட்டவர்களால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை, இலங்கையிலுள்ள இனவாதிகள் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.
இத்தகைய தாக்குதல் சம்பவங்களால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படுகின்றது. எமது நாடு பழைய, கசப்பான அனுபவங்களை மறந்து, புதிய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .