Gavitha / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மலையகத்தில் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து 1983, 1989, 1990களில் காணாமல் போனவர்கள் பற்றிய முழு விபரங்களையும் திரட்டுவதற்கு, அரசினால் அமைக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் காரியாலயம் நடவடிக்கை எடுக்க வேண்டும' என சௌமிய இளைஞர் நிதியத்தில் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.
'இக்காலக் கட்டங்களில் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்ட பெருந்தோட்ட தேயிலை இறப்பர் தொழிற்சாலைகளுக்கான நட்டஈட்டை வழங்க வேண்டும் அல்லது புதிய தொழிற்சாலைகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அவர் கூறியுள்ளார்.
அமரர் சௌமியமூரத்தி தொண்டமானின் 103வது ஜனன தினத்தையொட்டி, 'தொண்டமான்வாரம்' என்ற தொனிப்பொருளில் பல சமூக நல வேலைத்திட்டங்களை கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (4) வரை முன்னெடுத்த நிதியம், அதன் நிறைவு நாளான நேற்று (4) நிறைவேற்றப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளது.
இந்த ஐந்து அம்ச தீர்மானங்களில், 'மலையக பெருந் தோட்டப்பகுதிகளில் 1983-1989-1990களில் காணாமல் போனோர் தொடர்பில் காணாமல்போனோர் காரியாலயம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இக்காலக்கட்டங்களில் எரியூட்டப்பட்ட தேயிலை- இறப்பர் தொழிற்சாலைகளை மீண்டும் நிர்மாணித்தல்;, அல்லது நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்தல், நட்டத்தில் இயங்குவதாக கூறப்படும் அனைத்து தோட்டங்களுக்கும் புதிய வேலைத்திட்டத்தை உருவாக்கி இலாபம்மீட்டும் வகையிலான யுக்தியை கையாண்டு அதனை செயற்படுத்துதல், இந்திய வீடைமைப்புத் திட்டத்தை கேகாலை கண்டி-களுத்துரை மாவட்டம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .