Freelancer / 2022 பெப்ரவரி 09 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைக்குழந்தையுடன் பல நாட்களாக கண்டியில் சுற்றித் திரிந்த குறித்த பெண்ணை, பொலிஸ் கண்காணிப்பு அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியதில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் அவர் சில காலமாக பாடசாலை மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததுள்ளமை தெரியவந்தது.
சந்தையில் 15 ரூபாவுக்கு விற்கப்படும் இந்த மாத்திரை பாடசாலை மாணவர்களுக்கு 100 முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் வாக்குமூலத்திற்கு அமையச் சம்பவம் தொடர்பில் முன்னணி போதைப்பொருள் வியாபாரி ஒருவரையும் அவரது கூட்டாளியையும் கண்டியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான எஸ்.எஸ்.பி சி. கே. ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில், பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
10 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
46 minute ago