Editorial / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
காணாமல் போன 12 வயது சிறுமொருவர், கண்டி நகரில் சுற்றித்திருந்துகொண்டிருந்த நிலையில், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
கண்டி - பைரவகந்த பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே, இவ்வாறு காணாமல் போயிருந்தார். இச்சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பாக, கண்டி பொலிஸ் நிலையத்தில், சிறுமியின் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று (15) காணாமல் போன இச்சிறுமியிடம் இருந்த அலைபேசி இலக்கத்தை வைத்தே, சிறுமி உள்ள இடத்கை் கண்டுபிடித்த பொலிஸார் அவரை மீட்டுள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளின் போது தான் சிலரால் கடத்தப்பட்டுவிட்டதாக கூறிய சிறுமி, பின்னர், தானாகவே வீட்டிலிருந்து வெளியே வந்ததாக, பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த சிறுமி, வைத்திய பரிசோதனைக்காக, கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் சிறுமி சென்ற இடங்களில் உள்ள பாதுகாப்பு கமெராகள், அவரிடம் இருந்த அலைபேசி தரவுகளை அடிப்படையாக கொண்டு, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago