2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மின்சாரம், குடிநீர் கட்டணப் பட்டியல்: செலுத்த வேண்டிய தொகை மிக அதிகம்

Editorial   / 2020 மே 21 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

 

மின்சாரக் கட்டணம், குடிநீர்க் கட்டணம் ஆகியவற்றுக்கான பட்டியல்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பட்டியில் தொகை அசாதாரணமான முறையில் அதிகரித்துக் காணப்படுவதாக, நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக மின்சாரக் கட்டம், குடிநீர்க் கட்டணம் ஆகியவை விநியோகிக்கப்படாத நிலையில், தற்போது விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பன்வில பகுதியில் இம்மாதம் விநியோகிக்கப்பட்டுள்ள பட்டியலில், கடந்த மாதப் பட்டியல்கள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் அலகுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டு காணப்படுவதாகவும் பாவனையாளர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், எந்த அடிப்படையில் இந்தக் கட்டணங்கள்  அறவிடப்பட்டுள்ளது என்பதற்கான விளக்கம் தங்களுக்கு குறிப்பிடப்பட்டில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தனித்தனி பட்டியல்கள் விநியோகிக்கப்படும் போது, மேலதிக அலகுகள் கட்டணப்பட்டியலில் சேர்க்கப்படாது என்றும் ஆனால், இரு மாத பட்டியல்களும் ஒன்றாக சேர்க்கப்பட்டிருப்பதா,ல் மேலதிக பாவனை அலகுகள் அதிகரித்திருப்பதால், பல மடங்கு கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளதாக பாவனையாளர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

சாதாரணமாக செலுத்த வேண்டிய 200, 300 ரூபாய் கட்டணங்கள், 5,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டிருப்பதாக, கண்டி பன்விலை பிரதேச பாவனையாளர்கள் தெரிவித்தனர்.

எனவே, இது குறித்து உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பாவனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .