2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

விபத்தில் பெண் பலி: வெதமுல்லையில் பதற்றம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம், கு.புஸ்பராஜ், ஆ.ரமேஸ்

நுவரெலியா, வெதமுல்லையில் லொறியில் மோதுண்டு பெண்ணொருவர் இன்று  மாலை உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நுவரெலியா நகரத்தில் இருந்து கண்டி நோக்கி சென்ற லொரி ஒன்று,  வெதமுல்ல தொழிற்சாலைக்கு செல்லும் சந்தியில் வைத்து பாதையை கடக்க முயன்ற பெண் மீது மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே பலியானார்.

விபத்தில்,  வெதமுல்லையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான வரதராஜ்  சந்திரகலா (வயது 36) என்பவரே உயிரழந்துள்ளார்.
இந்நிலையில் தோட்ட மக்கள்  லொறியையும் லொறியின் சாரதியையும்  அவ்விடத்திலிருந்து வெளியேற விடாது சூழ்ந்துகொண்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரியவருகிறது.

பெண்ணின் சடலம் தற்போது கொத்மலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .