Kogilavani / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
'தமிழ் முற்போக்குக் கூட்டணியின் விளம்பரப் பதாகை சேதமாக்கப்படுவதற்கு முன்பாக அவ்விடத்தில் கொட்டக்கலை ஆலயக் குருக்கள் மற்றும் மூவர் நின்று உரையாடுவது சீசீடிவி கமராவில் பதிவாகியுள்ளது. சீசீடிவி கமராவில் பதியப்பட்ட சாட்சியங்களை வைத்தே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்' எனத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொட்டகலை பிரதேச அமைப்பாளர் சிவகுமார் சுரேஸ் தெரிவித்தார்.
'விளம்பரப் பதாகை சேதமாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், திம்புள-பத்தனை பொலிஸார் ஆலய குருக்களிடம் விசாரணை செய்தமை, இந்து மதத்துக்கு எதிரானதல்ல. ஆனால், சிலர் ஆலயக் குருக்கள் விடயத்தை அரசியலாக்க முற்படுகின்றனர்' என்றும் அவர் கூறினார்.
மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் நாட்டின் தேசியத் தலைவர்கள் ஆகியோரின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட விளம்பரப் பதாகையை சேதமாக்கிய சம்பவமானது, நல்லாட்சியை முன்னெடுக்கும் தலைவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவே அமைகின்றது.
இருந்தும் சிலர், தொழிலாளர் தேசிய சங்கம், இந்து மதத்துக்கு இழிவான செயலைச் செய்து விட்டதாகத் தம்பட்டம் அடிக்கின்றனர். ஆலயக் குருக்களை வைத்து அரசியல் நாடகத்தை அரங்கேற்ற முற்படுகின்றனர்;. இதை நாம் கண்டிக்கின்றோம்.
விளம்பரப் பதாகை சேதமாக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பழனி திகாம்பரம், பொலிஸாருக்குப் பணித்துள்ளார். எனினும், கொட்டகலை நகரில் திருவிழா காலம் என்பதால், பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாக சபையினரின் வேண்டுகோளுக்கிணங்க விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. திருவிழாவின் பின்னர் மீண்டும் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .