2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

‘வன்முறைகளால் ஒன்றுமறியாத அப்பாவிக் குழந்தைகள் பாதிப்பு’

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனக்கலவரம், மதக்கலவரம், யுத்தம், வன்முறைகளின் போது, அதிகம் பாதிக்கப்படுவது ஒன்றுமறியாத அப்பாவிக் குழந்தைகளும் பெண்களும் தான் என, மலையக மக்கள் முன்னணியின் தலைரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைருமான கலாநிதி வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உலக ஆக்கிரப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம், இன்று (04) அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், இது தொர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

போரின் போது, பாடசாலை கட்டடங்களே குறிவைத்து தாக்கப்படுவதாக தெரிவித்த அவர், வறுமையில் வாடும் குழந்தைகள் பல மடங்காகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று மலையகத்தில் குழந்தைகளின் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது என்றும் குழந்தைகளுக்கு மந்த போஷணம் அதிகித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

எனவே, மலையகக் குழந்தைகளின் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படல் வேண்டும் என்றும் பாடசாலைகளின் சத்துணவுத் திட்டம் அனைவருக்கும் கிடைக்க, அரசாங்கம் புதிய திட்டங்களை முன்வைக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் பெரும்பாலான குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களாக அமர்த்தப்படுதல், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவதால், குழந்தைகள் நாளாந்தம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் இதற்கு தீர்வு காணப்படல் வேண்டும் என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .