Kogilavani / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
நுவரெலியா பிரதேச சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரிகளை, எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் கட்டி முடிக்குமாறு மேற்படி பிரதேச சபை, பொதுமக்களை கோரியுள்ளது.
செப்டெம்பர் மாதம் வருமானம் மேம்பாட்டு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய மாகாண சபையுடன் இணைந்து சகல உள்ளூராட்சி நிறுவனங்களும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் நுவரெலியா பிரதேச சபையும் அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.
மக்கள் செலுத்தும் வரிகள் மூலமாக இலவச ஆயுர்வேத சேவை, நூலக சேவை, பாலர் பாடசாலை, வீதி புனரமைப்பு, நீர் சேவைகள் போன்ற சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே, மேற்படி பிரதேச சபைக்குச் செலுத்த வேண்டிய நிலுவை வரிக்கட்டணம், நீர்க்கட்டணம், கடை வாடகை, காணி குத்தகை என்பவற்றை எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதிக்குள் செலுத்தி முடிக்குமாறு நுவரெலியா பிரதேச சபை செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .