ஆ.ரமேஸ் / 2020 மே 18 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சு பதவியென்பது தனியொரு மனிதனின் சொத்து அல்ல என்றும் இதை யாரும் யாருக்கும் கேட்டு வாங்கி கொடுக்கும் பொருளும் அல்ல என்றும் தெரிவித்துள்ள ஹட்டன் நகர சபையின் உறுப்பினரும் முன்னாள் நகரசபைத் தலைவர் அழகமுத்து நந்தகுமார் இதை, அகங்காரம் பிடித்த அரசியல்வாதிகள் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வெட்கமின்றி பதவிகளை கேட்டால் வாங்கிகொடுப்பேன் என, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், தமிழ் மிரருக்கு வழங்கியிருந்த செவ்வியை மேற்கோள் காட்டி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, இதுவரையில் இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை யாரும் கோரவில்லை என்றும் எவரும் எவருக்கும் கேட்டுப் பெற்றுக்கொடுக்கவும் தேவையில்லை என்றும் தெரிவித்த அவர், இதற்கு, பொதுத் தேர்தல் பதில் சொல்லும் என்றும் கூறினார்.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், யார் அமைச்சராக வரவேண்டும் என்பதை, மக்கள் தேர்ந்தெடுப்பர் எக்றும் அப்போது, யாரெல்லாம் ஓட்டம் எடுப்பவர் என்பதைப் பார்க்கலாம் என்றும் கூறினார்.
மலையக பெருந்தோட்ட மக்களின், வசதியற்ற லயன் வாழ்க்கை முறையிலிருந்து வெளியேறி, தனிவீடுகளில் வாழவேண்டும் என்ற ஏக்கத்தை தனித்தவர் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் என்பதை மலையக மக்கள் இன்றும் மறந்துவிடவில்லை என்பதை ஞாபகப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த அரசாங்கத்தால் அமைத்து கொடுக்கப்பட்ட ஒரு சில தனி வீடுகளில் சிறுசிறு குறைப்பாடுகள் காணப்படுவதாகக் கூறி, மமலிவான அரசியலை மக்கள் மத்தியில் சிலர் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago