2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

‘வானிலை மோசமடையும்போது சலுகை தரவும்’

ஆ.ரமேஸ்   / 2020 மே 20 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலநிலை மாற்றங்களால் ஏற்படும்  அசாதாரண  சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் தொழில் நடவடிக்கைகளில் தோட்ட நிர்வாகங்கள் சலுகைகளை வழங்க, தொழிற்சங்கங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்  என கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

கடும் மழை, காற்று, மின்னல் தாக்கம் சந்தர்ப்பங்களை எதிர்கொண்டே, தாங்கள் நாளாந்தம் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், தொழிலாளர்களின் உழைப்பை மாத்திரமே நிர்வாகங்கள் கருத்தில் கொள்வதாக, தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடும் மழையுடன் கூடிய வானிலை நிலவும்போது, தோட்ட நிர்வாகங்கள் தொழில் நடவடிக்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .