Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2017 நவம்பர் 16 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
“லிந்துலை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு, வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு இடையிலான முறுகல் நிலையே காரணமாகும். அதனை விரைவில் தீர்ப்பதற்கான நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்” என்று, மத்திய மாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சாந்தி சமரசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக, விசேட குழுவொன்றையும் நியமித்துள்ளதாக, அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“வைத்தியர்கள் மற்றும் இரு தாதியர்களுக்கு இடையிலான முறுகல் நிலை காரணமாக, லிந்துலை வைத்தியசாலையில் அசாதாரண நிலைமை ஏற்பட்டுள்ளது. தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, நோயாளர்களே பாதிப்படைந்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளோம். இதற்காக, விசேட விசாரணைக் குழுவொன்றையும் நியமித்துள்ளோம். அதுவரையில், லிந்துலை வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். நோயாளர்களின் நிலைமையையும் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
8 hours ago