2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்குத் தடை

Editorial   / 2020 மே 19 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.


மலையகத்தில் பெய்து வரும் அடை மழையால், இன்று காலை 11 மணியிலிருந்து ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாகத் தடைபட்டுள்ளதுடன், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இதற்கமைய வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கள மகா வித்தியாலயத்துக்கு அருகில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதுடன், தியகல பிரதேசத்தில் கற்களுடன் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X