2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஹல்பே சமூர்த்தி வங்கிக்கு தமிழ் அதிகாரியை நியமிக்கவும்

Kogilavani   / 2016 மார்ச் 24 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

தமிழ் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக பதுளை- பண்டாவரளை ஹல்பேயில் இயங்கிவரும் சமூர்த்தி வங்கிக் கிளைக்கு, தமிழ் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.     

மேற்படி வங்கிக் கிளையில் தமிழ் அதிகாரி ஒருவர் பணிக்கு அமர்த்தப்படாமையினால், பணம் வைப்பு மற்றும் மீளப் பெறுவதற்காக வங்கிக்குச் செல்லும் தமிழ் வாடிக்கையாளர்கள், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

குறிப்பாக, பணம் வைப்பு மற்றும் மீளப்பெறல் படிவங்ளை தமிழ்மொழியில் நிரப்பிக்கொடுக்கும்போது அப்படிவங்களை அதிகாரிகள் பொறுப்பேற்க மறுப்பதாக தெரியவருகிறது.

இவ்வங்கியில் சகோதர மொழியைச் சேர்ந்த நால்வரே பணியாற்றி வருவதாகவும் இவர்களுக்கு தமிழ்மொழி புரியாததால் தாம் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், இவ்வங்கிக்கு சகோதரமொழியைச் சேர்ந்த ஒருவரை அழைத்துச்சென்று, மேற்படி படிவங்களை நிரப்ப வேண்டிய கட்டாய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் கவலை  தெரிவிக்கின்றனர்.

400இற்கும் மேற்பட்ட தமிழர்கள், இவ்வங்கியில் வாடிக்கையாளர்களாக உள்ளதாக தெரியவருகின்றது. எனினும் தமிழ் அதிகாரி ஒருவர் இதுவரை நியமிக்கப்படாமை, பெறும் குறையாகவுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் வங்கி அதிகாரி ஒருவரிடம் வினவியப்போது, 'தமிழ்மொழியில் கடமையாற்றக்கூடிய ஒருவர், இவ்வங்கியில் பணிக்கு அமர்த்தப்படாமை பெரும் குறையே.  விரைவில் அக்குறையை நிவர்த்திசெய்ய  நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .