Freelancer / 2024 ஜனவரி 31 , மு.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆனைக்கோட்டை சந்தி மற்றும் குளப்பிட்டி சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் (29) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் குழுவாக நின்றவர்களை சோதனையிட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முயன்ற போதே பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 05 பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான மானிப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
7 minute ago
24 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
28 minute ago