Janu / 2024 மே 08 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் புத்தூரில் உள்ள ஆலய சூழலில், மரம் வெட்டிக் கொண்டு இருந்த ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்றுள்ளது .
திருநெல்வேலி, கலாசாலை வீதியை சேர்ந்த ஓய்வுபெற்ற பல்கலைக்கழக உத்தியோகத்தரான 61 வயதுடைய முத்து சிவலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரை , காயமடைந்த நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது .
அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Apr 2026