Freelancer / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
வடமராட்சி, மாலைசந்தை தனியார் கல்வி நிலையத்திற்கு முன் வீதியின் குறுக்காக சென்ற மாட்டை காப்பாற்ற முயற்சித்த போது முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த கரணவாய், கரவெட்டி பகுதியைச் சேர்ந்த மாம்பழம் மகேந்திரன் (வயது 50) என்ற முச்சக்கர வண்டி சாரதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுகயீனத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த பின் வீடு திரும்பிய போது, மாடு ஒன்று வீதியின் குறுக்கே வந்துள்ளது.
குறித்த மாட்டை காப்பாற்ற முயற்சித்த போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி, வீதி வாய்க்காலுக்கு மேலாக பாய்ந்து தனியார் கல்வி நிலையத்திற்குள் புகுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (R)
31 minute ago
7 hours ago
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
7 hours ago
16 Apr 2026
16 Apr 2026