Janu / 2024 மே 13 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 03 கிலோ வெடிமருந்துகள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாட்டி கடற்கரை பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி படையினரால் 03 கிலோ 145 கிராம் வெடி மருந்துக்கள் , ஆர்.பி.ஜி எறிகணைகள் 08 மற்றும் 60 எம்.எம். மோட்டார் எறிகணைகள் 12 மீட்கப்பட்டுள்ளது .
இவ்வாறு மீட்கப்பட்ட வெடி பொருட்களையும் , கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எம்.றொசாந்த்



7 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
50 minute ago
1 hours ago