2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

முதலாவது காலாண்டில் நாட்டின் மொத்த ஏற்றுமதி 8.1 வீதத்தால் சரிவு

A.P.Mathan   / 2013 மே 09 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் மொத்த ஏற்றுமதி 8.1 வீதத்தால் சரிவடைந்துள்ளதாகவும், 2.57 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து, 2.36 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மொத்த ஏற்றுமதியில் சுமார் 75 வீத பங்கை வகிக்கும் தொழிற்துறைசார் ஏற்றுமதிகள் பெருமளவு வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், மார்ச் மாதத்தில் மாத்திரம் ஏற்றுமதி வீழ்ச்சி 2.8 வீதமாக பதிவாகியிருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஆயினும் ஆடைத்தொழில்துறையுடன் தொடர்புடைய உற்பத்திகள் முதல் காலாண்டில் 8.7 வீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. அமெரிக்காவுக்கான ஆடை உற்பத்திகள் கடந்த பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பை காண்பித்திருந்தன. 
 
விவசாயத்துறை சார்ந்த உற்பத்திகளும் முதல் காலாண்டில் 4.2 வீத வீழ்ச்சியை பதிவு செய்திருந்தன. 2012ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 575 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட விவசாயத்துறை சார்ந்த உற்பத்திகள், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 551 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தன.
 
தாதுப்பொருட்களின் ஏற்றுமதி பெருமளவில் வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .