2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

உலக நீர் தினம் 2013ஐ எக்ஸ்போலங்கா அனுஷ்டிப்பு

A.P.Mathan   / 2013 மே 08 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக நீர் தினத்தை முன்னிட்டு சர்வதேச ரீதியில் முன்மொழியப்பட்டிருந்த 'ஒவ்வொரு துளியும் முக்கியமானது' எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம், UNDP, சூழல் மற்றும் மீள்பயன்படுத்தக்கூடிய வலு அமைச்சு மற்றும் இதர சமூக ஆர்வலர்களுடன் இணைந்து 'ஒவ்வொரு துளியும் முக்கியமானது ஸ்ரீலங்கா' எனும் திட்டத்தை முன்னெடுத்திருந்தது. 
 
பியகம பகுதியில் அமைந்துள்ள களனி ஆற்றுப் பகுதியில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு துளியும் முக்கியமானது என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலம் முன்னெடுக்கப்படும் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம், சமூகங்களுக்கு நீரின் மூலம் வலுச்சேர்ப்பது என்பதற்கமைவாக நீர் குறித்தும், கழிவுகள் குறித்;தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கு அறிவூட்டும் செய்றபாடுகள் போன்றன முன்னெடுக்கப்பட்டுள்ளன. சமூகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சிறந்த அடித்தளத்தை வழங்கும் வகையில் அமைந்த சிறந்த நடவடிக்கைகள் போன்றவற்றை வழங்குவதன் மூலம், பல்வேறு வகையான சூழல்சார்ந்த பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்கின்றன.  
 
இந்த நிகழ்ச்சித் திட்டங்களில் நீர் தரம் மற்றும் நீர் தர பிரச்சனைகள், திண்ம கழிவுகளிலிருந்து உயிரியல் வாயு தயாரிப்பதற்கான வளங்கள், கழிவுநீர் மற்றும் மலசலகூட கழிவுகள் அல்லது நீரின் தரத்தை பாதிக்கக்கூடிய கழிவுகள் குறித்த கூட்டாண்மை துறை செயலமர்வுகள் மற்றும் கழிவு, நீர், ஆரோக்கியம் மற்றும் CFL குமிழ்கள், e-கழிவுகள் மற்றும் பாவிக்காத மருந்துகள் குறித்து சமூக ஆர்வலர்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்  வகையிலான திட்டங்கள் போன்றன முன்னெடுக்கப்பட்டிருந்தன.
 
UNDPயின் இலங்கை சூழல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ திட்டத்துக்கான தலைமை அதிகாரி கலாநிதி. ஆனந்த மல்லவதந்திரி கருத்து தெரிவிக்கையில், 'கழிவு குறித்து நாம் ஆராய்கையில், எமது முழு கவனத்தையும் நாம் நகரசபை கழிவுகளின் மீது செலுத்துகிறோம். CFL குமிழ்களினுள் காணப்படும் இரும்பு மற்றும் e-கழிவுகள், எரியும் பிளாஸ்ரிக் மூலம் சூழலுக்கு வெளிவிடப்படும் நச்சு வாயுக்கள் மற்றும் பயன்படுத்தாத மருந்துப்பொருட்களின் காரணமாக சூழலில் ஏற்படுத்தப்படும் உயிரியல் ரீதியான மாற்றங்கள் போன்றன குறித்து போதியளவு கவனத்தை நாம் செலுத்துவதில்லை. ஒவ்வொரு துளியும் முக்கியத்துவமானது திட்டத்துக்கு அமைவாக, தனியார் துறைசார்ந்த நிறுவனங்களும் இந்த பாரதூர சுகாதார விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் குறித்து தமது சமூக பொறுப்புணர்வு திட்டத்துக்கு அமைவாக கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்க விடயமாக அமைந்துள்ளது' என்றார். 
 
இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில், நீர் பாவனை, தரம் குறைந்த நீர் மற்றும் ஆரோக்கியம் குறித்து சமூக ஆர்வலர்களின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீதி நாடகம் பெருமளவு வரவேற்பை பெற்றிருந்தது. 
 
இந்த திட்டம் குறித்து எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல், கூட்டாண்மை தொடர்பாடல்கள் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் பிரிவின் தலைமை அதிகாரி பெடி வீரசேகர கருத்து தெரிவி;க்கையில், 'சூழலை பாதுகாப்பதற்கு நாம் மிகவும் ஆழமாக சிந்தித்து வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். அவற்றில் இது போன்ற நடவடிக்கைகள் சிறந்த நாளைய தினத்தை ஏற்படுத்துவதற்கான எமது உறுதி மொழியாக அமைந்துள்ளன. இந்த திட்டத்தில் பங்கேற்று தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்த அனைவரினதும் செயற்பாடுகள் பாராட்டுதலுக்கு உரியது' என்றார்.
 
ஐ.நா-நீர் அமைப்பின் மூலம் 2013ஆம் ஆண்டு 'நீர் ஒருமைப்பாட்டுக்கான ஆண்டு' என பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு துளியும் முக்கியமானது ஸ்ரீலங்கா திட்டத்தின் மூலம் இந்த பிரகடனத்துக்கு வலுச் சேர்க்கப்படுவதுடன், பொது நிறுவனங்கள், உள்நாட்டு நிர்வாக சபைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பியகம பகுதியை சேர்ந்த சமூகம் போன்றவற்றை ஒன்றிணைத்து செயற்பட முடிந்திருந்தது.
 
வீரசேகர தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், 'எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம் எப்போதும் தான் செயற்படும் சமூகங்கள் மத்தியில் நீண்ட கால நிலைத்திருப்புக்கான நடவடிக்கைகளை விஸ்தரித்து வருகிறது. நிறுவனத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் வர்த்தக செயற்பாடுகளுடனான சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் சமூக, பொருளாதார மற்றும் சூழல் அனுகூலங்களை ஊழியர்களுக்கும், சமூகங்களுக்கும் இதர பங்காளர்களுக்கும் வழங்கும் வகையில் அமைந்துள்ளன. கடந்த காலங்களில் கம்பனியின் மூலம் பல நீண்ட கால நோக்கில் அமைந்த மற்றும் குறுகிய கால நோக்கத்தில் அமைந்த சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் இது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்' என்றார்.
 
எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் மூலம் குறிப்பிடத்தக்க சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில், எக்ஸ்போ மெடிக்ஸ் - குறைந்த செலவீனத்துடனான மருத்துவ சிகிச்சை கிளினிக், இலவச ஆரோக்கிய முகாம் மற்றும் சுகாதாரம் மற்றும் நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு திட்டங்கள் போன்றன முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், பட்டப்படிப்பு புலமைப்பரிசில் திட்டங்கள், அனர்த்த நிவாரணம், கட்டமைப்பு அபிவிருத்தி, உணவு திட்டங்கள் மற்றும் சூழல் சார் முன்னெடுப்புகள், இதில் புவி மணித்தியாலம் மற்றும் சூழல் தின நடவடிக்கைகள் போன்றனவும் உள்ளடங்குகின்றன. அனைத்து சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளும் 5 வெவ்வேறு பிரிவுகளை நோக்கமாக கொண்டமைந்துள்ளன. அவற்றுள் சுகாதாரம், கல்வி, சூழல், சமூக அபிவிருத்தி மற்றும் அனர்த்த நிவாரணம் போன்றன  உள்ளடங்குகின்றன. சிறந்த நாளைய தினத்துக்காக செயற்படும் கூட்டாண்மை கம்பனி எனும் வகையில் எக்ஸ்போலங்கா தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .