2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இலங்கைக்கு மேலும் சீனாவின் EXIM வங்கியின் நிதியுதவி

A.P.Mathan   / 2013 மே 29 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் EXIM வங்கியின் தலைமை அதிகாரி லீ ரூகொ தொடர்ந்தும் இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்கு நிதியுதவிகளை வழங்க தமது வங்கி தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹி்ந்த ராஜபக்ஷவுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.
 
நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு சீனா பயணமாகியுள்ள இலங்கை ஜனாதிபதி மஹி்ந்த ராஜபக்ஷவுக்கும் சீனாவின் EXIM வங்கியின் தலைமை அதிகாரி லீ ரூகொவும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த உறுதி மொழி வழங்கியிருந்தார். 
 
அவர் கருத்து தெரிவிக்கையில், ஏற்கனவே சீனாவின் EXIM வங்கியின் மூலம் இலங்கையில் மத்தள ராஜபக்ஷ விமான நிலையம், மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகம், நிலக்கரி மின்உற்பத்தி நிலையம் போன்றன உள்ளடங்கலாக சுமார் 37 திட்டங்களுக்கு நிதியுதவிகளை வழங்கியுள்ளதாகவும், ஜப்பான், உலக வங்கி போன்றவற்றுக்கு நிகராக அதிகளவு நிதியுதவிகளை வழங்கி வரும் அமைப்பாக EXIM வங்கி திகழ்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
 
2012ஆம் ஆண்டில் மட்டும் EXIM வங்கியின் மூலம் 515 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கடனாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .