2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

சீனா, இந்தியா 2030இல் உலகின் மாபெரும் முதலீட்டு நாடுகளாக திகழும்

A.P.Mathan   / 2013 மே 21 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் மீது மேற்கொள்ளப்படும் முதலீடுகள் எதிர்வரும் இரண்டு தசாப்த காலப்பகுதியினுள் மூன்று மடங்கினால் அதிகரிக்கும் எனவும், 2030ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ளும் நாடுகளில் சீனா மற்றும் இந்தியா முன்னிலையில் திகழும் எனவும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதனடிப்படையில் அடுத்த இரு தசாப்த காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் பொருளாதார வளர்ச்சி 2.5 – 3% ஆக அமைந்திருக்கும், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 4.8 – 5.6% ஆக அமைந்திருக்கும் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .