
இலங்கையில் ExxonMobil உயவுப்பொருட்களை (லுப்ரிகன்ட்ஸ்) வகைகளின் ஏகவிநியோகத்தர்களாக திகழும் மெக்லாரன்ஸ் லுப்ரிகன்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், டீசல் வாகனங்களில் பயனபடுத்தக்கூடிய 'Mobil Delvac MX ESP 15W-40' எனும் நவீன உயவுப்பொருளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் டீசல் என்ஜின்களுக்காக தெரிவுகளில் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ள இந்த தயாரிப்பு, நாட்டின் டீசல் என்ஜின் பாவனையாளர்களுக்கு சூழல் பாதுகாப்பான தயாரிப்பை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக உயர் வினைத்திறனை வழங்கக்கூடிய என்ஜின் ஒயில் என தரப்படுத்தப்பட்டுள்ள இந்த Mobil Delvac MX ESP 15W-40, நவீன, உயர் வினைத்திறனை வழங்கக்கூடிய மற்றும் குறைந்த மாசை வெளியிடக்கூடிய என்ஜின்களுக்கு உகந்த வகையில் அமைந்துள்ளது. அத்துடன், Exhaust Gas Recirculation (EGR) மற்றும் After treatment Systems உடனான Diesel Particulate Filters (DPFs) மற்றும் Diesel Oxidation Catalysts (DOCs) என்பவற்றுக்கும் உகந்தது. நவீன என்ஜின்களில் உயர்ந்த வினைத்திறனை வழங்கக்கூடிய வகையில் அமைந்த ஒயில், பழமையான என்ஜின்களுக்கும் உயர் வினைத்திறனை வழங்கும் வகையில் அமைந்துள்ளன.
இந்த அறிமுக நிகழ்வில், மெக்லாரன்ஸ் லுப்ரிகன்ட்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் லலித் டி சில்வா கருத்து தெரிவிக்கையில், 'நீண்ட காலமாக உலகின் முன்னணி ExxonMobil லுப்ரிகன்ட் நிறுவனமொன்றின் பெருமை வாய்ந்த பங்காளராக திகழ்வதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். வாகனங்களுக்கு எப்போதும் உகந்த சிறந்த என்ஜின் ஒயில்களை தயாரிப்பதற்காக இந்த நிறுவனம் தன்னை அர்ப்பணித்துள்ளது. இன்று நாம் அறிமுகப்படுத்தும் லுப்ரிகன்ட் உயர் வினைத்திறனை கொண்ட டீசல் என்ஜின் ஒயில் வகையை சேர்ந்ததாகும். ஆதிக வினைத்திறன் கொண்ட வாகனங்களில் இந்த ஒயில் வகை பயன்படுத்தப்படுகிறது. விசேடமாக ட்ரக்கள், அகழ்வுகள், நிர்மாணம், காவிச் செல்லல் மற்றுமு; விவசாய துறைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் பெருமளவில் இந்த ஒயில் வகை பயன்படுத்தப்படுகிறது. Mobil Delvac MX ESP 15W-40 என்பது பல முன்னணி டீசல் என்ஜின்களானCaterpillar, Cummins, Detroit Diesel, Deutz, Mack, Mercedes Benz, Renault, Navistar மற்றும் Volvo போன்றவற்றில் சிறப்பான வெளிப்பாட்டை வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது. இந்த ஒயில் வகையை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் மேலதிக வினைத்திறனை புதிய மற்றும் பழைய என்ஜின்களில் வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது. API CJ-4, CI-4 PLUS மற்றும் CH-4 சேவை தகைமைகளை ஈட்டும் அல்லது அதிகரித்துச் செல்லும் வகையில் இந்த தயாரிப்பு அமைந்துள்ளதுடன்,Original Equipment Manufacturer (OEM) தகைமையையும் கொண்டுள்ளது' என்றார்.
Mobil Delvac MX ESP 15W-40 என்பது வாகன உரிமையாளர்களுக்கு நீண்ட கால நோக்கில் அனுகூலங்களை வழங்கக்கூடிய வகையில் டீசல் என்ஜின் வகைகளுக்கும் வினைத்திறனை அதிகரிக்கக்கூடிய விதத்தில் வெளிவருகிறது. சில பிரதான அனுகூலங்களில் என்ஜின் சிக்கனம், நீண்ட என்ஜின் ஆயுட்காலம் மற்றும் நீண்ட என்ஜின் ஒயில் ஆயுட்காலம், வெப்பநிலை மாற்றங்களை தாங்கிக் கொள்ளல் போன்றன உள்ளடங்குகின்றன. செயற்பாட்டின் போது குறைந்த மேக்அப் ஒயில் மற்றும் நீண்ட காஸ்கெட், சீல் மற்றும் after treatment (DPF and DOC) ஆயுட்காலம் போன்றவற்றால் ஒயில் செலவீனத்தை குறைக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
Mobil Delvac MX ESP 15W-40 அதிக அல்லது குறைந்த பாரத்துடன் வேகமாக அல்லது மெதுவாக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும், பயணிக்காத வாகனங்களுக்கு உகந்த வகையில் அமைந்துள்ளது.