
இலங்கை காப்புறுதி சம்மேளனத்தின் 2013ஆம் ஆண்டுக்கான அலுவலக நிர்வாகிகளின் தெரிவானது, அண்மையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற 24ஆவது பொதுக்கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்டிருந்தது.
1989ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட இலங்கை காப்புறுதி சம்மேளனத்தின் பிரதான நோக்கம், ஆயுள் அற்ற மற்றும் ஆயுள் காப்புறுதி துறையின் இணைப்பு சம்மேளனமாக திகழ்வதாக அமைந்திருந்தது. செயற்திறன், சீரமைப்பை ஊக்குவித்தல் மற்றும் சிறந்த பின்பற்றல்களை ஊக்குவித்தல் மற்றும் உயர் ஒழுக்க தரங்களை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசாங்கத்துடன் இணைந்து கொள்கைகளை மீளாய்வு செய்து அமுல்படுத்தல் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள், சந்தை விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் இலங்கை காப்புறுதி சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், யூனியன் அஷுரன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேர்க் பெரெயிரா பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மொஹான் டி அல்விஸ் மற்றும் ஒரியன்ட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தீப்தி லொகுஆராச்சி செயலாளராகவும், தவிசாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.