இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் போசணை குறித்த அவசியம் குறைவடைந்து கொண்டே செல்கின்றது. மேலும் இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்கள் துரித உணவுகளையே நாடத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக இன்றைய சமூகத்தினரிடையே மேலதிக போசாக்கு நிறைந்த ஆகாரம் குறித்த தேவை எழுந்துள்ளதுடன், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் மூலம் சமபோஷ 4GB எனும் புதிய தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் பெரும்பாலானோர் துரித உணவுகளின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வின்றி காணப்படுகின்றனர். அதிக கலோரி கொண்ட உணவுகளை காட்டிலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் நமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான சக்தியை பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கை மக்களின் போசாக்கு மட்டம் குறித்து தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்பட்டு வரும் பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் நீண்ட ஆராய்ச்சிகளின் பின்னரே சமபோஷ 4GB தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமபோஷ தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும்; அரிசி, பாசிப்பயறு, சோளம் மற்றும் சோயா ஆகிய தானிய வகைகளை கொண்டு 4GB பார் ஆக (4Grain Bar) தயாரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். வயது வித்தியாசமின்றி, பரபரப்பான வாழ்க்கையில் போசாக்கு நிறைந்த மேலதிக உணவாக எந்தவொரு நேரத்திலும் உண்ணக்கூடிய வகையிலுள்ள 4GB வர்த்தகநாமமானது சுவை, போசணை மற்றும் இலகுவாக உணவாக உட்கொள்ளக்கூடிய வகையில் காணப்படுவதால் ஏனைய மேலதிக ஆகாரங்களிடையே விசேட ஸ்தானத்தை பெற்றுள்ளது.
இளம் சமுதாயத்தினரின் சவால்களான கல்வி, விளையாட்டு, மற்றும் ஏனைய கடுமையான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களிற்கு பிரதான உணவு வேளைக்கிடையே உற்சாகத்தை அளிக்கக்கூடிய ஓர் ஆகாரமாக 4GB இனை குறிப்பிட முடியும். அரிசி மற்றும் சோளத்தில் அடங்கியுள்ள காபோவைதிரேட்டானது நம் உடலுக்கு சக்தியை அளிப்பதுடன், பாசிப்பயறு மற்றும் சோயா ஆகியன உடலுக்கு அவசியமான புரதச்சத்தினை வழங்குகிறது.
4GB இன் வர்த்தகநாம தூதராகவும், இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய உப தலைவராகவும், Twenty 20 அணித் தலைவராகவும் உள்ள தினேஷ் சன்திமால் தனது பரபரப்பான வாழ்விற்கு ஏற்ற சமபோஷ தயாரிப்புகள் தனக்கு மிகவும் பிடித்தமானவை என்றார். எனது அணியினருடனான வெளியூர் பயணங்களின் போது எடுத்துச் செல்லக்கூடிய சௌகரியமிக்க ஆகாரமாக 4GB உள்ளது. மிகக்குறுகிய காலத்தில் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி இலங்கை கிரிக்கெட் அணியின் உப தலைவராகவும், Twenty 20 அணித் தலைவராகவும் விளங்குகின்ற தினேஷ் சன்திமால் பாடசாலை காலத்திலிருந்தே கிரிக்கெட் போட்டிகளில் தமது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார். பாடசாலை கிரிக்கெட் வீரராகவிருந்த காலப்பகுதியில் 1580 புள்ளிகளை பெற்று 1000 புள்ளி எல்லையை கடந்து புதிய சாதனையை நிகழ்த்தினார். இவர் விக்கெட் காப்பாளராகவும், துடுப்பாட்ட வீரராகவும் திகழ்கின்றார். இவ்வாறான பரபரப்பான வாழ்க்கையை கொண்டு நடத்தும் தினேஷ் சன்திமால் போன்ற வீரர்களுக்கு பிடித்த ஆகாரமாக 4GB இருப்பதுடன், அதன் சுவை மற்றும் போசணை மட்டம் போன்றன காரணமாக உள்ளது.
விட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அடங்கியுள்ள 4GB தயாரிப்பானது நியுட்ரா, ரெய்ஸின் மற்றும் சொக்ஸி என மூன்று சுவைகளில்; கிடைக்கின்றது. சர்க்கரைப்பாகில் ஊறவைத்த ஊட்டச்சத்து நிறைந்த சமபோஷ பபுள்ஸ்கள் 'நியுட்ரா' தயாரிப்பில் அடங்கியுள்ளன. உலர்ந்த திராட்சை சுவை ததும்பும் வகையில் 'ரெய்சின்' தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் பரந்த நியுட்ரா துண்டுகளின் மேல் சொக்லட் கலவையின் சுவையுடன் 'சொக்ஸி' தயாரிக்கப்பட்டுள்ளது. இத் தயாரிப்புகளின் சுவை மற்றும் நறுமணம் குறையாது இருப்பதற்கு அனைத்து தயாரிப்புகளின் பொதிகளும் லெமினேட் செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் பல சுவைகளில் 4புடீ தயாரிப்பினை அறிமுகப்படுத்த பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் எதிர்பார்த்துள்ளது.