2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வளர்ச்சி காணும் ஆசியா இதர நாடுகளை விட முன்னணியில் திகழும்: ஃபிட்ச் எதிர்வுகூறல்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியாவின் பரந்த பொருளாதார செயற்பாடுகள் உலகின் இதர நாடுகளை விட முன்னணியில் திகழச்செய்யுமென ஃபிட்ச் எதிர்வுகூறியுள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் விரைவாக வளர்ச்சியடையும் பொருளாதார நிலையை 2014ஆம் ஆண்டு வரை ஆசியா கொண்டிருக்குமெனவும், இக்காலப்பகுதியில் சராசரியாக 6- 6.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை ஆசியா பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியாவின் பொருளாதார ஜாம்பவானாக திகழும் சீனாவின் (ஆசியாவின் மொத்த தேசிய உற்பத்தியின் 48 சதவீதத்தை தன்னகத்தே கொண்டுள்ளது) பொருளாதார செயற்பாடுகளை தவிர்த்து இதர ஆசிய நாடுகளின் செயற்பாடுகளை கருத்தில் கொள்கையில் 2012இல் 5 சதவீத வளர்ச்சியையும், 2013இல் 5.5 சதவீத வளர்ச்சியையும் 2014இல் 6 சதவீத வளர்ச்சியையும் எய்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2012-2014 வரையிலான காலப்பகுதியினுள் ஆசிய பிராந்தியத்தில் பணவீக்கம் 3.7 சதவீதமாக அமைந்திருக்குமெனவும், இது 2001 – 2011 வரையிலான காலப்பகுதியினுள் எய்தப்பட்ட 3.6 சதவீத வளர்ச்சியை விட சற்றே அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதர உலக நாடுகளின் பணவீக்கம் இதே காலப்பகுதியில் வருடமொன்றுக்கு 4.8 சதவீதமாக அமையுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .