2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மூன்றாம் காலாண்டில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வீழ்ச்சி

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி யுத்தம் நிறைவடைந்த பின்னர் முதல் தடவையாக இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் வீழ்ச்சி கண்டுள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் 4.8 வீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்திருந்ததாகவும், 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இதே காலப்பகுதியில் முறையே 8.5வீதம் மற்றும் 8 வீத பொருளாதார வளர்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2009ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 4.2 வீத பொருளாதார வளர்ச்சி பதிவாகியிருந்தமையை தொடர்ந்து முதல் தடவையாக பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வீழ்ச்சிக்கு சேவைகள் துறை, விவசாயம், வனாந்தரம் மற்றும் மீன்பிடி போன்ற துறைகள் பிரதான பங்களிப்பை வழங்கியிருந்தன. இதனை தொடர்ந்து நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியை முன்னர் கணிக்கப்பட்ட 6.8 வீதத்திலிருந்து 6.5 வீதமாக இலங்கை மத்திய வங்கி குறைத்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .