2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மாற்றுத்திறன் மாணவர்களின் கலை மேம்பாட்டுக்கு உதவும் லாபேர்ஜ் நிறுவனம்

A.P.Mathan   / 2013 மே 05 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


லாபேர்ஜ் மஹாவலி சீமெந்து நிறுவனம் தமது கூட்டு சமூக பொறுப்பின் ஓர் அங்கமாக சுனெர மன்றத்தின் நாடக பயிற்சிகளுக்கு அனுசரணை வழங்குவதன் மூலம் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் அதிக பயனும் நன்மையும் பெறுகின்றனர். 

மாற்றுத்திறன் கொண்ட சிறுவர்களை ஊக்குவித்து அவர்களிடமுள்ள விசேட திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களது வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் கடந்த பல ஆண்டுகளாக லாபேர்ஜ் நிறுவனம் இத்தகைய ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.

மாற்றுத்திறன் கொண்ட சிறுவர்களுக்கு உதவும் நோக்கில் நாடுமுழுவதிலும் 39 கிளைகளை கொண்டுள்ள சுனெர மன்றம் அனைத்து கிளைகளிலும் நாடக செயமலர்வுகளை நடத்தி அவர்களை ஊக்குவித்து வருகின்றது. மஹரகமவில் நடைபெறும் பயிற்சிகளுக்கான அனுசரணையை லாபேர்ஜ் நிறுவனம் ஏற்று மாணவர்களுக்கு உதவுகின்றது.

மஹரகமவில் அமைந்துள்ள சுனெரா மன்றத்தில் நடைபெறுகின்ற நாடக செயமலர்வுகளில் 30 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். அத்துடன் அவர்கள் வருடந்தோறும் நடைபெறுகின்ற நாடக திருவிழாவான 'சமனல யாய' நிகழ்ச்சியில் பங்குபற்றி தமது திறமைகளையும் சிறப்பு தேர்ச்சிகளையும் வெளிக்காட்டும் களமாவும் அதனை பயன்படுத்துகின்றனர்.

நாடக பயிற்சிகள் தவிர கைவினைப் பொருட்கள், ஆபரணங்கள் போன்றவற்றை தயாரிக்கவும் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர வருடாந்த சுற்றுலாப் பயணங்கள், புதுவருட மற்றும் நத்தார் தின கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .