2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஜூன் மாதத்தில் கொழும்பு பங்குச்சந்தையின் டுபாய் ரோட் ஷோ

A.P.Mathan   / 2013 மே 06 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டின் இரண்டாவது ரோட் ஷோ நிகழ்வை டுபாய் நகரில் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தாம் மேற்கொண்டுவருவதாக கொழும்பு பங்குச்சந்தை அறிவித்துள்ளது.

கடந்த வாரம் அனைத்து பங்குமுகவர் நிறுவனங்களுக்கும் அழைப்பிதழ்களும், கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்பாடுகள் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும், ஏனைய பல நிறுவனங்களை இணைத்துக்கொள்ள தாம் திட்டமிட்டுள்ளதாகவும் கொழும்பு பங்குச்சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேகா செல்லஹேவா தெரிவித்திருந்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் இந்தியாவின் மும்பாய் நகரில் இடம்பெற்ற ரோட் ஷோ நிகழ்வை போலவே, இநத நிகழ்வும், இலங்கையின் பதில் நிதி அமைச்சர் சரத் அமுனுகம, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் இதர உயர் அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .