2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வேவ்நெட் நிறுவனத்தால் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு புதிய மென்பொருள்

A.P.Mathan   / 2013 மே 06 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


அவசர சந்தர்ப்பத்தில் அம்பியூலன்ஸ் சேவைக்கு நோயாளி இருக்கும் இடத்தை அறிந்துகொள்வதற்கான புதிய மென்பொருளொன்றை அறிமுகப்படுத்த உலகின் முதல்நிலை அம்பியூலன்ஸ் சேவை நிறுவனமான பெல்க் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இந்த மொன்பொருளை அறிமுகப்படுத்த வேவ்நெட் மற்றும் பெல்க் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மென்பொருளுக்கான தொழில்நுட்ப உதவிகளை வேவ்நெட் நிறுவனம் வழங்குகின்றது. உள்ளுர் மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகள் எவ்விடத்தில் இருந்தாலும் அவசர மருத்துவ உதவியை இதன்மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

என்ட்ரொய்ட் அப் ஒன்றின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள இச்சேவையை தேவையான நேரத்தில் 1990 இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பெறலாம். தொலைபேசி அழைப்பு கிடைத்ததும் அப் மூலம் குறித்த இடத்தை உரிய முறையில் அடையாளம் கண்டு அவ்விடத்துக்கு அம்பியூலன்ஸ் போய்ச் சேருவதற்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில் இது அமைந்துள்ளதுடன் இப்புதிய சேவையை இலங்கையில் விஸ்தரிக்கும் நோக்கில் கடந்த ஜனவரி மாதம் வேவ்நெட்டும் பெல்க்கும் கைகோர்த்துக்கொண்டன.

பெல்க் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் டொனி வுட்யார்ட் தமது சேவை தொடர்பில் விபரிக்கையில், 'அவசர தேவையின்போது எவருக்கும் பெல்க் அவசர பிரிவான 1990 ஐ 24 மணிநேரமும் மும்மொழிகளிலும் தொடர்பு கொள்ளலாம். எமது சேவையுடன் பதிவு செய்துகொண்ட ஒருவர் தொடர்பினை ஏற்படுத்தினால் அவரது வீட்டு, அலுவலக விலாசங்கள், மருத்துவ வரலாறு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் எமது குழுவினரால் அறிந்;துகொள்ள முடியும். அத்துடன் நோயாளரின் அழைப்பு கிடைத்ததும் GPS தொழில்நுட்பம் ஊடாக அவர் இருக்கும் இடம் தொடர்பாக அருகிலிருக்கும் அம்பியூலன்ஸ் சேவைக்கு அறிவித்து துரிதமாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் அம்பியூலன்ஸ் வண்டி நோயாளியை சென்றடையும் வரை நோயாளிக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கவும் குழுவினர் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்' என தெரிவித்தார்.

மேலும் விபரித்த அவர், 1990 அழைப்பு கிடைத்த இடத்தின் வரைபடம் அம்பியூலன்ஸிலுள்ள மென்பொருளின் உதவியுடன் தென்படுவதால் குறித்த இடத்தை சிரமமின்றி சென்றடையலாம். எம்மிடமுள்ள அனைத்து அம்பியூலன்ஸ் வண்டிகளும் ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் வண்டிகளின் தரத்துக்கேற்ப அமைந்துள்ளது. அம்பியூலன்ஸ் சேவைகளுக்கு புறம்பாக இலங்கையில் முதற்தடவையாக மோட்டார் சைக்கிள் சேவையையும் ஆரம்பித்துள்ளோம். அதற்காக விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட குழுவொன்றும் உள்ளது. குறுந்தகவல் அனுப்பி எம்மிடமிருந்து உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளலாம். டயலொக், எடிசலாட், மொபிடெல் ஆகிய கையடக்க தொலைபேசிகள் மூலம் 1990 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்பி தமது உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள முடியும்' என குறிப்பிட்டார்.

வேவ்நெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பின்டோ கருத்து தெரிவிக்கையில்,

அவர்களுடைய அம்பியூலன்ஸ் சேவை மேற்கத்தைய நாடுகளின் சேவையை ஒத்ததாக இருக்கின்றது. பெல்க் நிறுவனத்துடன் இணைந்து சிறந்த சேவையை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம். இருதரப்பினரும் இணைந்து இச்சேவையை விஸ்தரிக்க நோக்கம் அதன் நன்மைகள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே என கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .