2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

'ஃபெம்ஸ் மலேசியா ஷொபிங் ஷ்ரியா'

A.P.Mathan   / 2013 மே 07 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மையில் ஹேமாஸ் மனுபக்டரிங் (பிரைவட்) நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான ஃபெம்ஸ் வர்த்தகநாமத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட 'ஃபெம்ஸ் மலேசியா ஷொபிங் ஷ்ரியா' ஊக்குவிப்பு திட்டத்தின் இறுதி குலுக்கல் தெரிவில் வெற்றியீட்டிய தாய் மற்றும் மகள் ஆகியோருக்கான விமான பயணச்சீட்டு வழங்குதல் மற்றும் ஏனைய வெற்றியாளர்களுக்கான தங்க பதக்கம் வழங்கும் நிகழ்வுகள் போன்றன நடைபெற்றன. 
 
இவ் வெகுமதி வழங்கும் நிகழ்வானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி அதிகாரி புஷ்பா ரம்யானி டி சொய்சா, ஹேமாஸ் மனுபக்டரிங் (தனியார்) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரோய் ஜோசப், விற்பனை முகாமையாளர் ரகேஷ் கொஸ்லா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றதுடன், மாபெரும் இறுதிச்சுற்று தெரிவில் மலேசியா சுற்றுப் பயணத்திற்கான வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட 06 தாய், மகள் ஆகியோருக்கான விமான பயணச்சீட்டு மற்றும் ஏனைய வெற்றியாளர்களுக்கான தங்க பதக்கம் வழங்கும் நிகழ்வுகள் போன்றன நடைபெற்றன.
 
இவ் ஊக்குவிப்பு திட்டமானது ஃபெம்ஸ் வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு கடந்த நவம்பர் மாதம் முதல் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வாடிக்கையாளர்களிடம் ஃபெம்ஸ் 10 நாப்கின்கள் கொண்ட ஓர் பக்கற், பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு 'மலேசியா ஷொபிங் ஷ்ரியா' தா.பெ.இல 793, கொழும்பு எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இத் தெரிவானது மூன்று சுற்றுகளாக நடைபெற்றதுடன், தங்க பதக்கம் பெறும் அதிர்ஷ்டசாலிகளாக 55 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
 
இந் நிகழ்வில் கலந்துரையாடிய ஹேமாஸ் மனுபக்டரிங் (பிரைவட்) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரோய் ஜோசப், 'ஃபெம்ஸ் வர்த்தகநாமமானது கடந்த காலங்களில் பல வெற்றிகளை பெற்று சுகாதாரமான நாப்கின் வகைகளிடையே இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. தயாரிப்பு தொடர்பில் வாடிக்கையாளர்களிடம் காணப்பட்ட நம்பிக்கையே இவ் வெற்றிக்கு முதற் காரணியாகும். உயர் தரத்தினாலான தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதன் மூலம் இந் நம்பிக்கையினை பெற முடிந்துள்ளது' என தெரிவித்தார்.
 
ஃபெம்ஸ் வர்த்தகநாமத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் இவ் ஊக்குவிப்பு திட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஹேமாஸ் குழுமத்தின் உற்பத்தி முகாமையாளரான ஷமாளி பெரேரா, 'தாய் மற்றும் மகள் ஆகியோரின் நம்பிக்கையை வென்ற ஃபெம்ஸ் வர்த்தகநாமமானது மேலும் அவர்களுக்கிடையேயான பிணைப்பினை அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டத்தினை முன்னெடுத்திருந்தது. தாய், மகள் உறவிற்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குவது 'ஃபெம்ஸ் மலேசியா ஷொபிங் ஷ்ரியா' திட்டத்தின் எதிர்பார்ப்பாகும். இவற்றை கருத்தில் கொண்டு விமான பயணச்சீட்டு உள்ளடங்கலாக அனைத்து செலவுகளையும் நாம் பொறுப்பேற்பதுடன், மகிழ்ச்சியான அனுபவத்தினையும் வழங்கவுள்ளோம். இத்தகைய ஊக்குவிப்பு திட்டங்களை நாம் ஒவ்வொரு வருடமும் முன்னெடுத்து வருகிறோம்' என்றார்.
 
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி அதிகாரியான புஷ்பா ரம்யாணி விசேடமாக பெண்கள் மத்தியில் நல்ல சுகாதார பழக்கங்கள் காணப்படல் வேண்டும் என்றார். மேலும் கருத்து தெரிவித்த அவர் பெண்களின் சுகாதாரத்தை பொறுத்தவரை விசேடமாக தூய்மை மற்றும் பொருத்தமான நாப்கின்களை பயன்படுத்தல் குறித்து கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் காலநிலைக்கு ஏற்ப சுகாதார அமைச்சின் அங்கீகாரத்திற்கமைய தயாரிக்கப்பட்டுள்ள நாப்கின் வகைகளை பயன்படுத்த வேண்டும். அத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஃபெம்ஸ் தயாரிப்புகள் அமைந்துள்ளதுடன், இத்தகைய வர்த்தகநாமத்துடன் இணைந்து செயற்படுவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.  
 
வாடிக்கையாளர்களுக்கு தமது நன்றியை தெரிவிக்கும் நோக்கில் கடந்த வருடம் ஃபெம்ஸ் வர்த்தகநாமத்தின் மூலம் 'ரன் மில்லியன்' எனும் வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன்போது வாடிக்கையாளர்களுக்கு 1 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பதக்கம், தங்கச் சங்கிலி மற்றும் ஆபரணங்கள் போன்றன வெகுமதியாக வழங்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .