2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களில் உயர்ந்த பெறுமதி

A.P.Mathan   / 2013 மே 08 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) நிறைவடையும் பொழுது கடந்த ஒன்றறை வருடங்களில் பதிவாகியிருந்த உயர்ந்த பெறுமதியை பதிவு செய்திருந்தது. இதற்கு பிரதான காரணியாக சிறியளவிலான பங்குதாரர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஆர்வம் செலுத்தியமை அமைந்திருந்தது.
 
பிரதான விலைச்சுட்டெண் 6201.68 புள்ளிகளாகவும், S&P SL 20 சுட்டெண் 3511.95 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தொடர்ச்சியான பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
இலங்கை மத்திய வங்கியின் நாணயமாற்று கொள்கை இவ்வார இறுதியில் வெளியிடப்படவுள்ள நிலையில், பெருமளவானோர் வட்டி வீதங்களில் குறைப்பு ஏற்படும் என பரவலாக எதிர்பார்க்கின்றனர். இதன் காரணமாக அதிகளவு பங்கு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்றனர். சர்வதேச நாணய நிதியம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி திறைசேரி செயலாளர் வெளியிட்டிருந்த கருத்துக்களை தொடர்ந்து பங்குச்சந்தை 7.3 வீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. 
 
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகளவு தாக்கத்தை வெளிப்படுத்தியிருந்தன. 
 
நாணய கொடுக்கல் வாங்கல்களை பொறுத்தமட்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நேற்றைய தினம் 126.30-37 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .