2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் மூன்றாவது ஸ்தானத்தில் ஹுவாவே ஸ்மார்ட்ஃபோன்கள்

A.P.Mathan   / 2013 மே 08 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் ஸ்மார்ட்ஃபோன்களின் சந்தையில் ஹுவாவே ஸ்மார்ட்ஃபோன்கள் மூன்றாவது ஸ்தானத்தை தமதாக்கியுள்ளன. சிங்கர் நிறுவனத்தின் வழிகாட்டலில் இந்த உயர்ந்த நிலையை மிகவும் குறுகிய காலப்பகுதியில் ஹுவாவே தயாரிப்புகள் பெற்றுள்ளன.
 
இந்த சாதனை குறித்து ஹுவாவே டெக்னொலஜிஸ் லங்கா (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹுவாகிங் சன் கருத்து தெரிவிக்கையில், 'இந்த பெறுபேறு குறித்து நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஸ்மார்ட்ஃபோன்களின் பாவனையை அதிகரிக்கவும், அதன் மூலம், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும் வகையிலான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க ஹுவாவே நிறுவனம் தன்னை முற்றிலும் அர்ப்பணித்துள்ளது' என்றார்.
 
இலங்கையில் ஹுவாவே ஸ்மார்ட்ஃபோன்களின் ஏக விநியோகத்தராக சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி நிறுவனம் திகழ்கிறது. இது குறித்து சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், 'குறுகிய காலப்பகுதியினுள் இலங்கையின் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் மூன்றாம் நிலைக்கு உயர்வடைவதற்கு ஹுவாவே தயாரிப்புகளுக்கு நாம் வழங்கிய பங்களிப்பு குறித்து மகிழ்வடைகிறோம். தொடர்ந்தும் எமது விநியோக வலையமைப்பில் ஹுவாவே தயாரிப்புகளை கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்' என அவர் தெரிவித்தார்.
 
உலகின் மூன்றாவது சிறந்த ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரிப்பு நிறுவனமான ஹுவாவே, 2012ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு பகுதியில் சர்வதேச ரீதியில் சுமார் 16 மில்லியன் கையடக்க தொலைபேசிகளை விற்பனை செய்திருந்தது. சிங்கர் நிறுவனத்துடன் ஹுவாவே உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டதை தொடர்ந்து, ஹுவாவே கையடக்க தொலைபேசிகள் அதிகளவு இலங்கையில் பிரபல்யமடையத் தொடங்கியிருந்ததுடன், விற்பனை அதிகரிப்பையும் அவதானிக்க முடிந்தது.
 
சேவை வழங்கலில் 161 வருட கால முன் அனுபவத்தை கொண்டுள்ள சிங்கர், தனது பரந்த பல்தரப்பட்ட வர்த்தக நாம தயாரிப்புகளின் விற்பனைக்காக புகழ்பெற்று திகழ்கிறது. நாடு முழுவதும் பரந்த வலையமைப்பு கிளைகளை கொண்டுள்ளமை நிறுவனத்தின் உறுதித்தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இதன் மூலம் பொருட்களை இலகுவாக பெற்றுக் கொள்ள முடிகிறது. ஸ்மார்ட்ஃபோன்களுக்கு சிறந்த விற்பனை நிலையமாக சிங்கர் திகழ்கிறது. உலகின் முன்னணி வர்த்தக நாமங்களில் அமைந்த ஸ்மார்ட்ஃபோன்களை நாடு பூராகவும் காணப்படும் 390க்கும் அதிகமான சிங்கர் மெகா, சிங்கர் பிளஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் காட்சியறைகளிலிருந்து கொள்வனவு செய்து கொள்ள முடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .