
இலங்கை பல்வைத்திய சங்கம் (SLDA) குளோகார்ட் பற்பசைக்கான அங்கீகாரத்தை அண்மையில் புதுப்பித்ததன் மூலம் SLDA-குளோகார்ட் உறவை தொடர்ச்சியாக பதினைந்து ஆண்டுகள் எடுத்துச் செல்கின்றது.
1998இல் முதன் முறையாக குளோகார்டுக்கான அங்கீகாரத்தை வழங்கிய SLDA, அதுமுதற்கொண்டு வருடாந்தம் அதனை புதுப்பிகின்றது. இவ்வுற்பத்தியானது இலங்கையின் முன்னணிவாய்ந்த வாய் சுகாதார உற்பத்திகளில் ஒன்றாக திகழ்வதுடன், கடந்த பதினைந்து ஆண்டுகளாக, நாட்டுக்கான வாய் சுகாதார வழங்குனராக இலங்கை பல்வைத்திய சங்கத்தின் தரத்தை தக்கவைத்துள்ளது.
1992இல் அறிமுகப்படுத்தப்பட்ட குளோகார்ட், உள்ளூர் நுகர்வோரின் தேவைகளை உணர்ந்த 'இயற்கை மற்றும் விஞ்ஞானத்தின் சிறந்த' ஒரு குறியீடாக குடும்ப பற்பசை எனும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்ட ஃபுளோரைட் மற்றும் இயற்கையான கராம்பு எண்ணை ஆகியவற்றின் கலவையை உள்ளடக்கிய சிறந்த பற்பசையை நாட்டின் வாய் சுகாதாரத்துக்கென இது வழங்குகின்றது.
சந்தையில் முன்னணியிலுள்ள வாய் சுகாதார உற்பத்திகளுள் ஒன்றாக உள்ள குளோகார்ட், பரந்த உற்பத்திகளைக் கொண்ட ஹேமாஸ் மெனுபெக்சரிங்கின் உற்பத்தி வரிசையில் இரண்டாவது பெரிய குறியீடாகவும் உள்ளது. ஹேமாஸ் குழுமமானது FMCG, சுகாதார பராமரிப்பு, போக்குவரத்து, விடுமுறை ஏற்பாடு மற்றும் சக்தி உற்பத்தி ஆகிய ஐந்து பிரிவுகளில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இலங்கையின் முன்னணி கூட்டு நிறுவனமாகும்.