2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் வாகன பதிவில் மேலும் வீழ்ச்சி

A.P.Mathan   / 2013 மே 13 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தொடர்ந்து அமுலிலுள்ள வாகன இறக்குமதி தீர்வை காரணமாக, மோட்டார் வாகன பதிவில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
2013ஆம் ஆண்டின் முதல் 4 மாத காலப்பகுதியில் மோட்டார் வாகன பதிவுகள், முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 35.9 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 136,132 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், இந்த வருடம் முதல் 4 மாத காலப்பகுதியில் 87,209 வாகனங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் மோட்டார் வாகன பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
 
லொறிகள், மாருதி ரக கார்களின் பதிவில் அதிகளவு வீழ்ச்சி காணப்பட்ட அதேவேளை, BMW ரக கார்களின் பதிவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .