2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஹெல்த்கார்ட் கிளை தலவத்துகொடையில் அங்குரார்ப்பணம்

A.P.Mathan   / 2013 மே 13 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


சன்ஷைன் குழுமத்தின் கிளை நிறுவனமான SBL யினால் நிர்வகிக்கப்படுகின்ற ஹெல்த்கார்ட்டின் புதிய கிளையொன்று தலவத்துகொடையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை நாட்டின் பல பாகங்களில் தமது கிளைகளை திறந்து மக்களுக்கு அதன்மூலம் சேவையாற்றி வருகின்ற நிலையிலேயே ஹெல்த்கார்ட்டின் 16ஆவது கிளை அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
 
ஹெல்த்கார்ட் கிளையில் மருந்துப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், சிறுவர்களுக்கான சுகாதார பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய வசதிகள் பாவனையாளர்களுக்கு கிடைக்கின்றது.  
 
சன்ஷைன் குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் விஷ் கோவிந்தசாமி, சன்ஷைன் குழுமத்தின் பணிப்பாளரும் எஸ்.பி.எல் நிறுவனத்தின் பிரதானியுமான ஷியாம் சதாசிவம், அதிகாரிகள், விருந்தினர்கள் உட்பட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர். 
 
ஹெல்த்கார்ட் கிளைகளை கொழும்பிலும் நாடு தழுவிய ரீதியில் ஏனைய இடங்களிலும் அமைத்து மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .