2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு

A.P.Mathan   / 2013 மே 21 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியான 8ஆவது நாளாக உலக சந்தையில் தங்கத்தின் விலை நேற்று திங்கட்கிழமையும் வீழ்ச்சியடைந்திருந்தது. பெரியளவிலான முதலீட்டாளர்கள் தமது தங்க இருப்புகளை விற்று பணமாக மாற்றி வருவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் அறிவிக்கின்றன. 
 
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகின்றமையை அவதானிக்க முடிவதுடன், தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவடைந்த செல்கின்றமையால், பல மில்லயன் டொலர்களை தங்கத்தில் முதலீடு செயதிருந்த முதலீட்டாளர்கள் அதிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
 
சர்வதேச சந்தையில் தங்கம் சவரன் ஒன்று 1335.30 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகின்றது. கடந்த 30 ஆண்டுகளில் தங்கத்தின் விலை வேகமாக 9வீதத்தினால் ஒரே நாளில் சரிவடைந்தது இதுவே முதல் தடவையாக அமைந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .