2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

நேபாள செல்வந்தர் இலங்கையில் முதலீடுகளை விஸ்தரிக்க தீர்மானம்

A.P.Mathan   / 2013 மே 21 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தின் முதலாவது ஃபோர்ப்ஸ் செல்வந்தர் எனும் பெருமையை பெற்ற பினோத் சௌத்ரி, இலங்கையில் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் நவீன வசதிகளை கொண்ட சீமெந்து உற்பத்தி ஆலையை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கான விண்ணப்பத்தை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார். இலங்கையில் இவரது மொத்த முதலீடுகளின் பெறுமதி 200 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது.
 
இவர் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெறும் முன்னர், 2000ஆம் ஆண்டிலிருந்தே இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டு வந்திருந்தார். இதற்கு முன்னர் தாஜ் ஹோட்டல்ஸ் தொடரில் இவர் முதலீடுகளை மேற்கொண்டிருந்தார். 
 
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கூட, நாட்டின் உண்மையான முதலீட்டாளர்களில் ஒருவராக திகழ்ந்த இவர், நாட்டின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .