2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இலங்கையில் இணைய பாவனை அதிகரித்துள்ளது: கூகுள் நிறுவன அதிகாரி

A.P.Mathan   / 2013 மே 22 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் இணையத்தின் மூலம் நுகர்வோர் பாவனை பொருட்கள் குறித்த விபரங்களை திரட்டிக்கொள்வதற்காக இணையத்தை பாவிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் ஆனந்த் திலக் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின் அனைத்து துறைகளுக்குமான இணையத்தின் மூலமான ஆய்வு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாகவும், இதற்கு காரணம், இணையத்தை பார்வையிடக்கூடிய சாதனங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளமை அமைந்துள்ளதுடன், நாடு முழுவதும் பரவலாக இணைய சேவைகள் கிடைக்கின்றமையும் ஏதுவாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கொழும்பில் இடம்பெற்ற உயர் தரத்திலான சந்தைப்படுத்தல் செயலமர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஆனந்த் திலக் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
 
மக்கள் பொருட்கள் குறித்த தரவுகளை பெற்றுக்கொள்ள பெருமளவு நேரத்தை இணையத்தில் செலவிடுகின்றனர். வீடியோ பதிவுகளை பார்வையிடுவதில் ஆர்வம் செலுத்துகின்றனர். இலங்கையில் Youtube பார்வையிடல் பெருமளவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் Youtube பார்வையிடுவதற்காக மக்கள் செலவிடும் நேரம் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 4 மடங்கால் அதிகரித்துள்ளது.
 
இதுபோன்ற நவீன தளங்களில் முதலீடு செய்து சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் பெருமளவான மக்களின் கவனத்தை இலகுவாக ஈர்த்துக்கொள்ள முடியும் என குறிப்பிட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .