
அகியுனாஸ் (Aquinas) பல்கலைக்கழக கல்லூரியினால் முன்னெடுக்கப்பட்ட 'ஆண்டு நிறைவு நடைபவனி' (Anniversary Walk) நிகழ்வின் முதல் பரிசாக புத்தம் புதிய சுசுக்கி மாருதி 800 சீசீ கார் ஒன்றினை கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் அண்மையில் அன்பளிப்புச் செய்துள்ளது.
கிட்டத்தட்ட 2000 பேர் இந்த நடைபவனியில் பங்கு கொண்டிருந்தனர். அவர்களுள் அகியுனாஸ் பல்கலைக்கழக கல்லூரியின் பழைய மற்றும் தற்போதைய மாணவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இவர்கள் நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்திருந்த தமது நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளுடன் ஒன்றிணைந்து இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதன்போது, புத்தம்புதிய சுசுக்கி மாருதி 800 சீசீ காரினை கொழும்பு - 15 ஐச் சேர்ந்த செல்வி. ஏ. இந்துமதி வென்றெடுத்தார்.
கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் அதிபரான அதிவணக்கத்திற்குரிய அருட்தந்தை பீற்றர் பிள்ளை ஓ.எம்.ஐ. அவர்களினால் 1953ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அகியுனாஸ் பல்கலைக்கழக கல்லூரியானது, இலங்கையின் உயர் கல்வித் துறையில் மிக முக்கியமான ஒரு கல்வியகம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இக்கல்லூரி இவ்வருடம் தனது 60ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. அத்துடன் கடந்த ஆறு தசாப்தங்களாக இதனது கல்விசார் நுழைவாயில்களின் ஊடாக முழுமையான ஆற்றல் கொண்ட பட்டதாரிகளாக பெருந்தொகையான மாணவர்கள் கல்வி கற்று வெளியேறியுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிதிக் கம்பனியாக கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் திகழ்கின்றது. நாடு முழுவதும் சேவை மையங்களை கொண்டியங்கும் இந்நிறுவனமானது, 30 வருடகால வரலாற்றையும் கொண்டுள்ளது. கொமர்ஷல் கிரெடிட் பலதரப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கி வருகின்றது. அவற்றுள் நிலையான வைப்புக்கள், குத்தகை, வாடகைக் கொள்வனவு, தங்கக் கடன்கள், ரியல் எஸ்டேட், தனிநபர் கடன்கள், கல்விசார் கடன்கள் மற்றும் நுண் நிதி வசதி போன்றவையும் உள்ளடங்குகின்றன.
கடந்த வருடம் இடம்பெற்ற பிரமாண்டமான 'SLIM வர்த்தக குறியீட்டு சிறப்புத்துவ விருதுகள் 2012' நிகழ்வின் போது 'ஆண்டின் மிகச்; சிறந்த சேவை வர்த்தகக் குறியீடு' பிரிவில் எதிர்பார்ப்புமிக்க தங்க விருதையும் 'ஆண்டின் மிகச் சிறந்த உள்நாட்டு வர்த்தக குறியீடு' பிரிவில் வெண்கல விருதையும் பெற்றுக் கொண்டதன் மூலம் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் இரட்டை வெற்றிவாகையை சூடிக்கொண்டது. SLIM விருது வழங்கலின் வரலாற்றிலேயே, வர்த்தக குறியீட்டின் சிறப்புத்துவத்திற்காக நிதிக் கம்பனியொன்று தங்க விருது வழங்கி அங்கீகாரம் அளிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
தற்போது மொத்தமாக நாடளாவிய ரீதியில் 46 அமைவிடங்களை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் தனது வலையமைப்பை மேலும் விஸ்தரிப்பதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளது. ஈடிணையற்ற வெற்றிகள் மற்றும் உறுதியானதொரு திட்டம் ஆகியவை தொடர்பில் நிரூபிக்கப்பட்ட வரலாற்றுப் பதிவை நிலைநாட்டியுள்ள இந்நிறுவனத்தின் தலைமைத்துவமானது, எதிர்காலத்தை கவனத்திற் கொண்டு வகுத்திருக்கின்ற இலட்சிய இலக்குகளை அடைந்து கொள்வதில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.