2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

சமபோஷ 'வசந்த உதானய'

A.P.Mathan   / 2013 மே 24 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்நாட்டு விவசாயிகளின் நலன் குறித்து தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் சிபிஎல் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் தொடர்ச்சியாக 6ஆவது வருடமாக முன்னெடுக்கப்பட்ட 'வசந்த உதானய' புத்தாண்டு களியாட்ட நிகழ்வானது இம்முறை கல்னேவ பிரதேச செயலகத்தின் புல்னேவ தொரனேகம விஹாரமகாதேவி விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப் புத்தாண்டு களியாட்ட நிகழ்வானது CBL நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் கொவி பவுல திட்டத்தின் ஓர் அங்கமான 'கொவி சதுட்ட' செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
 
இம்முறை புல்னேவ பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சமபோஷ 'வசந்த உதானய' புத்தாண்டு களியாட்ட நிகழ்வில் 42 பாரம்பரிய தேசிய விளையாட்டுகள் நடைபெற்றன. மேலும் வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் வெகுமதிகளிற்கான முழு அனுசரணையையும் பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனம் வழங்கியிருந்தது. இக் களியாட்ட நிகழ்வினை தொரனேகம யங் ஸ்டார்ஸ் விளையாட்டு அமைப்பு, கல்னேவ பிரதேச செயலகம், கல்னேவ பொலிஸ் நிலையம் மற்றும் கல்னேவ பிரதேச செயலகம் போன்றவற்றின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்ச்சிக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இந் நிகழ்வில் சைக்கிள் ஓட்டப்போட்டி, கால்பந்தாட்டம் மற்றும் ரபன் இசைத்தல் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இப் புத்தாண்டு களியாட்ட நிகழ்வில் அனைவரையும் கவரும் வகையில் அவுறுது குமரிய மற்றும் கொவி குமரா (விவசாய அழகன்) மற்றும் சிங்கிதி அவுறுது குமரா மற்றும் குமரிய தேர்வு செய்யும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
 
விவசாயிகளின் மகிழ்ச்சி கருதி ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்யப்படுகின்ற சமபோஷ 'வசந்த உதானய' புத்தாண்டு களியாட்ட நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த சிபிஎல் கூட்டு நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரத்ன, 'எமது தயாரிப்புகளிற்கான மூலப்பொருட்களை தேசிய விவசாயிகளிடமிருந்தே பெற்றுக் கொள்கிறோம். இதன் காரணமாகவே விவசாயிகளை எமது பங்காளர்களாக கருதுகிறோம். எனவே தான் நாம் கொவி பவுல எனும் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பல உதவிகளை வழங்கி வருகின்றோம். விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்துவதுடன், அவர்களின் வாழ்க்கைக்கு உற்சாகத்தையும், உந்துசக்தியையும் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதனை பணத்தால் அளவிட முடியாது' என்றார்.
 
சிபிஎல் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பாக சமபோஷ வர்த்தகநாமம் திகழ்கிறது. மேலும் 4GB, One the go  மற்றும் Nutri Cereal போன்ற சக்தியளிக்கும் தயாரிப்புகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத் தயாரிப்புக்களுக்கு தேவையான மூலப்பொருட்களை வழங்குவது எமது நாட்டு விவசாயிகளேயாவர். இதைத்தவிர, விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் சிபிஎல் குழுமத்தின் கூட்டு நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் 'கொவி பவுல' (விவசாயக் குடும்பம்) செயற்றிட்டத்தின் கீழ் 4 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத் திட்டங்களுள் விவசாய அபிவிருத்தி, விழிப்புணர்விற்கான 'கொவி தெனும' திட்டம், அசம்பாவித நிலைமைகளின் போது விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வகையில் 'கொவி சரண' திட்டம், விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் குதூகலத்திற்காக 'கொவி சதுட்ட' திட்டம், சமய கலாசார அபிவிருத்திகளுக்கு 'கொவி அரண' திட்டம் போன்றன அடங்குகின்றன. 
 
ஒவ்வொரு வருடமும் 'வசந்த உதானய' புத்தாண்டு களியாட்ட நிகழ்வானது கொவி சதுட்ட திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இதற்கு முன்னர் இந் நிகழ்வானது கிரிஇப்பன்வௌ, எப்பாவல, மகியங்கனை, களென்பின்துனுவௌ மற்றும் திஸ்ஸமஹாராமய ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .