2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இலங்கை கிரிக்கெட் அணிக்கான அனுசரணை டயலொக் வசம்

A.P.Mathan   / 2013 மே 27 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணிக்கான அனுசரணை வழங்குவதற்கான பகிரங்க ஏல கோரலை டயலொக் ஆக்சியாடா நிறுவனம் தன்வசப்படுத்தியுள்ளது. 753.9 மில்லியன் ரூபா மற்றும் வரிகளை உள்ளடக்கிய தொகைக்கான அனுசரணையை வழங்க முன்வந்துள்ளதாக டயலொக் ஆக்சியாடா நிறுவனம் கொழும்பு பங்குச்சந்தையில் தரவு வைத்துள்ளது. 
 
இதற்கமைவாக இலங்கையின் ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணிக்கான 3 வருட காலப்பகுதிக்கு பிரதான அனுசரணையாளராக டயலொக் ஆக்சியாடா தெரிவாகியுள்ளது. இந்த அனுசரணை ஜூன் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .