2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகளின் வெளியீடுகளின் தாக்கம் பங்குச்சந்தையில் பிரதிபலிப்பு

A.P.Mathan   / 2013 மே 27 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள் 
 
(ச.சேகர்)
 
வெவ்வேறு நிறுவனங்கள் தமது காலாண்டு மற்றும் நிதியாண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து, பங்குச்சந்தையில் கொடுக்கல் - வாங்கல்கள் உயர்ந்த நிலையை எய்தியுள்ளதாக பங்குமுகவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் தொடர்ச்சியாக கொழும்பு பங்குச்சந்தையில் நீடித்த வண்ணமிருந்ததை அவதானிக்க முடிந்தது.
 
கடந்த வியாழக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,488.85 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3666.04 ஆகவும் அமைந்திருந்தன. 
 
வெசாக் பௌர்ணமி விடுமுறையையொட்டி, கடந்தவாரம் பங்குச்சந்தை கொடுக்கல் - வாங்கல்கள் மூன்றரை தினங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
மே 20ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 4,799,515,231 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 34,875 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 32,876 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,999 ஆகவும் பதிவாகியிருந்தன. 
 
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் செரண்டிப் லாண்ட், கொன்வீனியன்ஸ் புட்ஸ், செவ்ரோன், லயன் பிரெவரி மற்றும் சிலோன் பெவரேஜ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 
 
எஸ்எம்பி லீசிங்(சாதாரண), சிலோன் பிரின்டிங், சிலோன் லெதர் (உரிமை பங்குகள்), பிசிஎச் ஹோல்டிங்ஸ் மற்றும் மெட்.ரெஸ்.ஹொல். போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை 
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 47,100 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 43,400 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. 
 
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 127.87 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 192.54 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .